இந்தியாவில் நாளை (செப். 09) ஜி – 20 மாநாடு தொடக்கம் – ஒற்றுமையாக செயல்படுவோம்…பிரதமர் பதிவு!

0
இந்தியாவில் நாளை (செப். 09) ஜி - 20 மாநாடு தொடக்கம் - ஒற்றுமையாக செயல்படுவோம்...பிரதமர் பதிவு!
இந்தியாவில் நாளை (செப். 09) ஜி - 20 மாநாடு தொடக்கம் - ஒற்றுமையாக செயல்படுவோம்...பிரதமர் பதிவு!
இந்தியாவில் நாளை (செப். 09) ஜி – 20 மாநாடு தொடக்கம் – ஒற்றுமையாக செயல்படுவோம்…பிரதமர் பதிவு!

இந்தியாவில் நாளை (08.09.2023) ஜி – 20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி உலக அமைதிக்காக ஒற்றுமையாக செயல்படுவோம் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி- 20 மாநாடு:

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளை (செப்.09) ஜி-20 மாநாடு தொடங்கவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளி நாட்டிலிருந்து பல்வேறு தலைவர்கள் இந்தியா வர உள்ள நிலையில் அவர்கள் வரும் பகுதி முழுவதும் சுமார் 5,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக 2 லட்சம் பேர் அடங்கிய பாதுகாப்பு படை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல் & டீசல் விலை குறைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்.. அரசின் திட்டம் என்ன?

தற்போது உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியை வந்தடைகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று பிரதமர் மோடி 15 உலக நாடு தலைவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாளை மாநாடு தொடங்க உள்ள நிலையில் பிரதமர் தனது சமூக ஊடகத்தில் பாலின சமத்துவம், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் உலக அமைதியை உறுதிப்படுத்த நாங்கள் ஒற்றுமையாக பாடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!