மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! சுகாதார அமைச்சர் விளக்கம்!

0
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! சுகாதார அமைச்சர் விளக்கம்!
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! சுகாதார அமைச்சர் விளக்கம்!
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! சுகாதார அமைச்சர் விளக்கம்!

தற்போது நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸின் மாறுபட்டினால் உருவான அச்சத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என சுகாதார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் அதன் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் கர்நாடகா, உத்தரகண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 21 பேருக்கு இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ஒமிக்ரான் மாறுபாடு குறித்த நிம்மதியற்ற சூழல் உருவாகியுள்ளதால், மீண்டுமாக நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு எச்சரிக்கை!

இப்படி இருக்க ஒமிக்ரான் மாறுபாட்டின் தோற்றத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் எந்தவிதமான பூட்டுதலும் இருக்காது என்றும் கொரோனா பொருத்தமான நடத்தைக்கு இணங்குவதுடன் பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் மட்டுமே தொடரும் என அம்மாநிலத்தின் பொது சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் ஒமிக்ரானின் புதிய வழக்குகள் எதையும் அரசு தெரிவிக்காத நிலையில் இதுவரை கண்டறியப்பட்ட புதிய மாறுபாட்டின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 – முதல்வர் வழங்கல்!

இது குறித்து அவர் கூறும் போது, ‘இப்போது மாநிலத்தில் எந்த வித ஊரடங்கையும் அமல்படுத்துவது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. மாநில பணிக்குழு அத்தகைய வழிகாட்டுதல்களை வழங்கவில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, மத்திய, மாநில பணிக்குழு மற்றும் முதலமைச்சரின் வழிகாட்டுதலை பின்பற்றி நடவடிக்கை எடுப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை 54 நாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்ட நிலையில், மும்பை, புனே மற்றும் நாக்பூர் விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை, ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்த 7,930 பேர் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வந்த 38,660 பேரை பரிசோதித்த அரசு இதில் இருவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வந்த கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது கவனிக்கப்படத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here