தினசரி இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மாநில செயற்குழு (SEC) ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளது. அதில் வார இறுதி ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1,151 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த வாரத்தில் இருந்த எண்ணிக்கையை விட மிகக் குறைவாக உள்ளது. இதனால் மொத்த தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை 4,46,648 ஆக மாறியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும், ஒட்டுமொத்த இறப்பு 4,715 ஆகவும் உள்ளது. ஜம்மு & காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனால் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில செயற்குழு (SEC) ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், ஞாயிற்றுக்கிழமை வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கில் ஒரு மணி நேரம் தளர்வை அளித்துள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கான வார இறுதி ஊரடங்கு ஆரம்பத்தில் ஜனவரி 15 அன்று முதலில் அறிவிக்கப்பட்டது. அடுத்த வாரம், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 64 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, ஆனால் வணிகர்கள் சார்பில் ஊரடங்கு அறிவிப்பினை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 30 அன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை மீண்டும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி அஞ்சலியாக களமிறங்கும் நடிகை – ரசிகர்கள் ஷாக்!
ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவிட்-19 நிலைமையைப் பற்றிய புதிய மதிப்பாய்வுக்குப் பிறகு வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் ஏ.கே. மேத்தா அறிவித்தார். அவரது தலைமையில் நடத்தப்பட்ட எஸ்இசி கூட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான கட்டுப்பாடுகளுடன் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறியது. இதனால் அத்தியாவசியமற்ற செயல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் தளர்வுகள் அளிக்கப்பட்டது.