விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி அஞ்சலியாக களமிறங்கும் நடிகை – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் இனி அஞ்சலியாக களமிறங்கும் நடிகை - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி அஞ்சலியாக களமிறங்கும் நடிகை – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோகரன் சீரியலில் இருந்து விலக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக களமிறங்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி:

விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் பல அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே சீரியல் பார்க்கும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் விலகி இருக்கின்றனர். முதலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

அவருக்கு பதிலாக சுகேஷ் என்பவர் நடித்து வருகிறார். மேலும் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார். மேலும் கண்ணம்மாவின் அப்பா சண்முகம் கதாபாத்திரமும் மாற்றப்பட்டுள்ளது. இப்படி அடிக்கடி மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் மீண்டும் முக்கிய கதாபாத்திரம் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணி சீரியலில் இருந்து விலக இருக்கிறார்.

நாடு முழுவதும் பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு முக்கிய தகவல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக கண்மணி அறிமுகம் ஆக இருக்கிறார். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை அருள்ஜோதி களமிறங்க இருக்கிறார். இனி பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக அவர் நடிப்பார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!