FSSAI நிறுவனத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

0
FSSAI நிறுவனத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலை - தேர்வு தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தில் (FSSAI) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Joint Director, Senior Manager, Deputy Director, Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Joint Director, Senior Manager, Deputy Director, Manager, Assistant Director, Deputy Manager, Administrative Officer
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.01.2024 / 16.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

FSSAI காலிப்பணியிடங்கள்:

FSSAI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Joint Director – 04 பணியிடங்கள்
  • Senior Manager – 02 பணியிடங்கள்
  • Deputy Director – 07 பணியிடங்கள்
  • Manager – 03 பணியிடங்கள்
  • Assistant Director – 02 பணியிடங்கள்
  • Deputy Manager – 04 பணியிடங்கள்
  • Administrative Officer – 04 பணியிடங்கள்

FSSAI கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, LLB, PG Diploma, BE, B.Tech, Doctorate Degree, M.Tech, MCA, MBA, CA, CS, ICWA ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

FSSAI அனுபவம்:

இந்த FSSAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU / யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

FSSAI வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

FSSAI ஊதியம்:

இந்த FSSAI நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.2,18,200/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

FSSAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

FSSAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த FSSAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (29.01.2024) சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 16.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!