தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை – இல்லையெனில் கடும் நடவடிக்கை …!

0
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை - இல்லையெனில் கடும் நடவடிக்கை ...!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாள் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

தேர்தல் அன்று விடுமுறை:

தமிழகத்தில் நூறு சதவீதம் வாக்களிப்பு நிகழ வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதாவது வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டால் அந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் Assistant Section Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்கள்!

இது குறித்து தொழிலாளர்கள் 1950 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வாக்குச் சாவடிகளுக்கு 1,59,100 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்; 88,783 ‘விவிபேட்’ இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!