Airtel வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன்? சூப்பர் அறிவிப்பு!

0
Airtel வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன்? சூப்பர் அறிவிப்பு!
Airtel வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன்? சூப்பர் அறிவிப்பு!
Airtel வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன்? சூப்பர் அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன்களை அறிவித்துள்ளது. அது என்ன கூப்பன்? அதனை எப்படி பெறுவது? என்பது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏர்டெல் இலவச கூப்பன்:

நாடு முழுவதும் மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதில் மாதம் தோறும் ரீசார்ஜ் செய்வது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. கட்டாயம் மாதம் குறிப்பிட்ட தொகை ரீசார்ஜ் செய்தால் தான் மக்கள் தங்களுடைய மொபைல் எண்ணை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் செய்யும் ரீசார்ஜ் மூலமாக ரூ.10 முதல் ரூ. 20 வரை சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதாவது இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், பெப்சிகோ இந்தியா எனப்படும், உணவு, சிற்றுண்டி மற்றும் குளிர்பான நிறுவனத்துடன் சேர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பெப்சிகோ இந்தியாவின், பெப்சி, மவுன்டெயின் ட்யூ, மிரிண்டா, 7அப், ஸ்லைஸ் மற்றும் ட்ராப்பிக்கானா பெட் ஆகிய குளிர்பானங்களை வாங்கினால், ரூ.10 ரூபாய் முதல் ரூ.20 வரை மதிப்புள்ள Airtel ரீசார்ஜ் கூப்பன்கள் இலவசமாக கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

இந்த குளிர் பயணங்களின் லேபில்களுக்கு பின் உங்களுக்கான இலவச ரீசார்ஜ் கூப்பன் இருக்கும். மேலும் அந்த பாட்டில்களை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் லேபிளில் உள்ள 12 இலக்க டிஸ்கவுண்ட் கோட் கூப்பனை கவனமாக சேகரிக்க வேண்டும். அதன் பின் நீங்கள் Airtel தேங்க்ஸ் ஆப் மூலமாக குறைந்தபட்சம் ரூ. 99 பிளானை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன் மூலம் ரூ. 10 முதல் ரூ. 20 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையானது பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வரை மட்டுமே செல்லுபடியாகும்.

பாட்டில்கள் மற்றும் கூப்பன்களின் விலை விவரம்:
  • ரூ.20 மதிப்புள்ள 200, 250, 350 மற்றும் 400மிலி பெட் பாட்டில்களை வாங்கினால் ரூ.10 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்.
  • ரூ.38 மதிப்புள்ள 500 மற்றும் 600மிலி பாட்டிலை வாங்கினால் ரூ.15 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்.

ரயிலில் பெண் பயணிகளுக்கான புதிய விதிமுறை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

  • ரூ.40 மதிப்புள்ள 750மிலி பெட் பாட்டிலை வாங்கினாலும் கூட ரூ.15 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்.
  • ரூ.60 மதிப்புள்ள 1.2 மற்றும் 1.5 லிட்டர் பாட்டிலை வாங்கினால் ரூ.20 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்.
  • ரூ.95 மதிப்புள்ள 1.75, 2 மற்றும் 2.25 லிட்டர் பாட்டிலை வாங்கினால் ரூ.20 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!