ரயிலில் பெண் பயணிகளுக்கான புதிய விதிமுறை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
ரயிலில் பெண் பயணிகளுக்கான புதிய விதிமுறை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயிலில் பெண் பயணிகளுக்கான புதிய விதிமுறை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயிலில் பெண் பயணிகளுக்கான புதிய விதிமுறை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

ரயிலில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கும் பெண்கள் பயணத்திற்கான டிக்கெட் எடுக்கவில்லை என்றாலும் கூட அந்த பெண்ணை ரயிலில் இருந்து இறக்கி விடக்கூடாது என்பது குறித்தான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறை:

மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் செலவு குறைவு என்பதாலும், பாதுகாப்பிற்காகவும் ரயிலில்தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். நாளுக்கு நாள் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு ஏற்றார்போல பல சலுகைகளை வழங்கி வருகிறது குறிப்பாக பண்டிகை தினங்களில் கூடுதல் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்காக பல விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இந்த விதிமுறைகளை கட்டாயமாக ரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக பல விதிமுறைகள் பெண் பயணிகளுக்காகவே விதிக்கப்பட்டுள்ளன. தற்போது பெண் பயணிகளுக்காக என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம். அதாவது தனியாக பயணம் செய்து கொண்டிருக்கும் பெண் பயணியிடம் பயணத்திற்கான டிக்கெட் இல்லை என்றாலும் கூட சோதனையின்போது டிக்கெட் பரிசோதகர் அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து இறங்கி விடக்கூடாது என்கிற ஒரு விதிமுறை இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிய மின் கட்டணம் அமல்? அமைச்சர் விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதாவது, தனியாக பயணிக்கும் பயணியை கீழே இறக்கி விடுவதால் பலவிதமான அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் பெண் பயணியிடம் டிக்கெட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் பரிசோதகர் முதலில் அந்தப் பெண்ணிடம் டிக்கெட் இல்லை என்பது குறித்த விவரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர், அந்தப் பெண்ணை அடுத்த ரயில் நிலையத்தில் பத்திரமாக டிக்கெட் எடுத்து வர சொல்ல வேண்டும். இந்த விதிமுறையை கட்டாயமாக பெண் ரயில் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். இது மட்டுமல்லாமல் பெண் ரயில் பயணிகளுக்காகவே எக்கச்சக்க விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!