தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – NEET இலவச பயிற்சி! ஜனவரியில் தொடக்கம்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - NEET இலவச பயிற்சி! ஜனவரியில் தொடக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - NEET இலவச பயிற்சி! ஜனவரியில் தொடக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – NEET இலவச பயிற்சி! ஜனவரியில் தொடக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இலவச NEET தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சியானது வரும் ஜனவரியில் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

NEET இலவச பயிற்சி:

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வாக NEET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த NEET தேர்வு தமிழகத்தில் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மட்டுமே போதுமானது. ஆனால் இப்போது 12ம் வகுப்பு முடித்து மருத்துவத்துறை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் NEET நுழைவுத் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும்.

TNPSC முதல் RRB வரை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்…!

இந்த தேர்வுக்கு 12ம் வகுப்பு பாடங்கள் மட்டுமின்றி இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வெளியிடப்படும் நீட் தேர்வுக்கான பாடங்களையும் படிக்க வேண்டும். இந்த தேர்வை எதிர்கொள்வதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதனால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தங்களை மருத்துவ துறையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ் படிக்க விரும்பும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச NEET தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வட்டி விகிதம் குறைப்பு!

அதாவது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அந்த ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது சூப்பர் 30 திட்டத்தின் கீழ் டாப்பர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சேராத மாணவர்களுக்கு வரும் ஜனவரி முதல் இரண்டு மாதங்களுக்கு இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!