ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வட்டி விகிதம் குறைப்பு!
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அந்த வகையில் குறைக்கப்பட்ட வட்டி விகித விபரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வட்டி விகிதம்:
இந்தியாவில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுகளுக்காக பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களை அளிக்கிறது. வாகன கடனில் 10.50% வட்டியில் ரூ.20,000 முதல் 3 லட்சம் வரை வாகன கடன் பெறலாம். செயலாக்க கட்டணம் இன்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. ரியாலிட்டி கோல்டுக்கு லோன் திட்டம் மூலம் 50,000 முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி பண்டிகை கால கடன் திட்டங்களையும் வழங்கியது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – 1.3.2022 கடைசி நாள்!
அதன்படி Festive Treats 3.0 என்ற பெயரில் பல கடன் திட்டங்களை குறைந்த வட்டியில் வழங்கியது. கடனுதவி திட்டங்களில் உள்ள வட்டி விகிதங்களை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் கடன் பெற முன் வருகின்றனர். இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. திய வட்டி விகிதங்கள் டிசம்பர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் பிக்ஸட் டெபாசிட், NRO மற்றும் NRE டெபாசிட் திட்டங்களுக்கு பொருந்தும்.
5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட வட்டி விகிதம்:
7 – 14 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.50% , 15 – 29 நாட்களுக்கு வட்டி விகிதம் – 2.50% 30 – 45 நாட்களுக்கு வட்டி விகிதம் – 3%, 46 – 60 நாட்களுக்கு வட்டி விகிதம் -3% , 61 – 90 நாட்களுக்கு வட்டி விகிதம் -3% , 91 – 120 நாட்களுக்கு வட்டி விகிதம் -3.50%21 – 150 நாட்கள் : 3.50%, 151 – நாட்களுக்கு வட்டி விகிதம் -183.50% 185 – 210 நாட்களுக்கு வட்டி விகிதம் -4.40%, 211 – 270 நாட்களுக்கு வட்டி விகிதம் -4.40%, 271 – 289 நாட்களுக்கு வட்டி விகிதம் – 4.40% 290 நாட்களுக்கு வட்டி விகிதம் – 4.40%, 1 ஆண்டுக்கு வட்டி விகிதம் – 4.40%390 நாட்கள் – 15 மாதங்களுக்கு 4.90% வட்டி, 15 மாதங்கள் – 18 மாதங்கள் : 4.90% 2 ஆண்டுக்கு – 5%3 ஆண்டுகள் : 5.20%, 5 ஆண்டுகளுக்கு – 5.40%, 10 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம்- 5.60%ஆகும்.