Police Constable ஆவது உங்கள் கனவா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்! இலவச பயிற்சி அறிவிப்பு!

0
Police Constable ஆவது உங்கள் கனவா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்! இலவச பயிற்சி அறிவிப்பு!
Police Constable ஆவது உங்கள் கனவா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்! இலவச பயிற்சி அறிவிப்பு!
Police Constable ஆவது உங்கள் கனவா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்! இலவச பயிற்சி அறிவிப்பு!

நீங்களும் pc  ஆகலாம். அட ஆமாங்க! இன்னும் என்ன யோசனை? உடனே வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல்  தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கவிருக்கும் இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயனடையுங்கள். மேலும், விவரங்கள் குறித்தும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்களை குறித்தும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சீருடைப்  பணியாளர் தேர்வு :

தமிழக காவல்துறையில்  தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அங்குள்ள காலிப்பணியிடங்கள் தகுதியானவர்களை கொண்டு நிரப்பப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக இருந்த 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்து முடிந்தது. அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 27ல் வெளியாகியதை அடுத்து  தற்போது இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் 30ம் தேதி வெளியானது.

Exams Daily Mobile App Download

அதில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சீருடை பணியாளர் தேர்வு வாரிய (TNUSRB) தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் நாராயணமூர்த்தி அறிவித்துள்ளார்.

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வுமுறை & பாடத்திட்டம் குறித்த விவரங்கள் இதோ!அவர் கூறியதாவது: இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துவங்க இருப்பதாகவும், இதுவரை நேரிலும், அலைபேசியிலும் 65 பேர் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பயிற்சியில் சேர்த்து பயனடைய விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04546 — 254 510 என்ற தொலைபேசியின் மூலமாகவோ  தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் மாதிரி தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் கையேடுகள் மூலம் தேர்வர்கள் தேர்வுக்கு தயார் செய்யப்படுவர். போலீஸ் தேர்வுக்கான உடற்தகுதி பயிற்சி அளிப்பது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், முறைப்படி உடற்தகுதி பயிற்சியும் அளிக்க உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!