TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வுமுறை & பாடத்திட்டம் குறித்த விவரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வுமுறை & பாடத்திட்டம் குறித்த விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வுமுறை &
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வுமுறை & பாடத்திட்டம் குறித்த விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப் 1 தேர்விற்கு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, TNPSC ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான http://tnpsc.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் கண்டிப்பாக வணிகம்‌ மற்றும்‌ சட்டம்‌ ஆகிய இரண்டிலும்‌ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் சமூக அறிவியலில்‌ முதுகலை பட்டம்‌ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும், தொழிலாளர்‌ நலனில்‌ அனுபவமும், கிராமப்புற சேவையில்‌ முதுகலை பட்டமும் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு? மத்திய அரசு விளக்கம்

மேலும், குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டம் குறித்தான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொது அறிவியல் என்று எடுத்துக்கொண்டால் அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மை, பிரபஞ்சத்தின் இயல்பு, தனிமங்கள் மற்றும் கலவைகள்,வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். தற்போதைய நிகழ்வுகள் என்றால் வரலாறு, அரசியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் ஆகியவற்றில் இருந்து வினாக்களும், இந்தியாவின் புவியியல் பிரிவுகளில் போக்குவரத்து தொடர்பு, சமூக புவியியல், இயற்கை பேரிடர் ஆகியவற்றில் இருந்து வினாக்களும், இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம், இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், உத்வேகம் மற்றும் மன திறன் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!