வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு? மத்திய அரசு விளக்கம்!

0
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு? மத்திய அரசு விளக்கம்!
காலக்கெடு நீட்டிப்பு மத்திய அரசு விளக்கம்!
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு? மத்திய அரசு விளக்கம்!

2021 – 2022 ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும், இதுபோன்ற எந்த பரிசீலனையும் தற்போது இல்லை என அரசு தெரிவித்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான வருமான வரி தாக்கல் விவரங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கிய தகவலை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் முக்கிய தகவல்:

2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல இடங்களில் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும், கடைசி தேதியை நீட்டிக்க அரசு தெளிவாக மறுத்துவிட்டது.

Exams Daily Mobile App Download

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31 க்கு மேல் நீட்டிக்கும் யோசனை அரசுக்கு தற்போது இல்லை என்று வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார். 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது ஜூன் 15, 2022 முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் அலுவலகத்தில் படிவம்-16 கிடைத்திருந்தால், தாமதமின்றி அதை நிரப்பவும். காலக்கெடுவிற்கு முன் நீங்கள் அதை நிரப்பவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்திய Post Office வேலைவாப்பு 2022 – 8 வது தேர்ச்சி போதும

இது தவிர, அதிக வரி செலுத்துவோர் வருமான வரி ஈ-பைலிங் இணையதளத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது சுமை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க விரும்பினால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே இந்த பணியை செய்து விடவும். கடந்த ஆண்டு கடைசி நாளில் 50 லட்சம் ரிட்டர்ன்கள் கிடைத்ததாக வருவாய்த்துறை செயலாளர் கூறினார். 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாமதக் கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆக உள்ளது, இந்நிலையில் நேற்று மாலை வரை தனிநபர் கணக்கு தாக்கல் தற்போது 4 கோடியை தாண்டியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நேற்று ஒரு மணி நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்து உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!