சென்னை டூ பெங்களூரு, திருப்பதிக்கு ரயில் மூலமாக செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
சென்னை டூ பெங்களூரு, திருப்பதிக்கு ரயில் மூலமாக செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
சென்னை டூ பெங்களூரு, திருப்பதிக்கு ரயில் மூலமாக செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
சென்னை டூ பெங்களூரு, திருப்பதிக்கு ரயில் மூலமாக செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த மாற்றங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரயில் சேவையில் மாற்றம்

தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் மே 17, 18 ஆகிய 2 நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காலை 9.45 முதல் பகல் 1.45 மணி வரை நடைபெற உள்ளது. அதனால் சென்னை – பெங்களூர், சென்னை – திருப்பதி ஆகிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சேவை மாற்றம் வருகின்ற 4 வாரங்களில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களிலும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் போராட்டம்!

இதையடுத்து தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில், பராமரிப்பு பணி காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி என இரண்டு மார்க்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் செல்லாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் ரேணிகுண்டா மற்றும் திருத்தணி வழியாக ரயில் இயக்கப்படும் ஆனால் பெரம்பூருக்கு செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் சில மின்சார ரயில்களும் கடம்பத்தூரில் இருந்து இயக்கப்படும். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here