ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு – இதை தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க!

0
ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு - இதை தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க!
ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு - இதை தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க!
ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு – இதை தெரிஞ்சுக்காம இருக்காதிங்க! உடனே பாருங்க!

இந்தியாவில் நீண்டதூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது இரவு நேரங்களில் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் போது மிடில் பெர்த் கிடைத்தால் சிக்கல்தான். அதனால் மிடில் பெர்த்தில் இருக்கும் பயணிகளுக்கு ரயில்வே துறை விதிமுறையை வகுத்துள்ளது.

பயணிகள் கவனத்திற்கு

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதனால் தற்போது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள பெரும்பாலும் ரயில் பயணமே உகந்ததாக இருக்கும்.

Exams Daily Mobile App Download

ஆனால் இதிலுள்ள சிக்கல் என்வென்றால் மிடில் பெர்த் கிடைத்தால் நம்மால் செளகரியமாக பயணிக்க இயலாது. ஏனெனில் கீழ் பெர்த்தில் இருக்கும் பயணிகள் இரவு நேரத்தில் தூங்கமால் இருப்பார்கள். அதனால் மிடில் பெர்த் உள்ளவர்களால் மிடில் பெர்த்தை ஓப்பன் செய்து படுக்க முடியாது. மேலும் சில சமயங்களில் மிடில் பெர்த் உள்ளவர்கள் சீக்கிரம் பெர்த்தை ஓப்பன் செய்வதால் கீழ் பெர்த்தில் உள்ளவர்களால் உட்கார முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாக இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டைகள் ஏற்படக்கூடும்.

தமிழக மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்கும் தனியார் பள்ளிகள்? முழு விளக்கம்!

இதனை தவிர்க்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் மிடில் பெர்த்தில் உள்ளவர்களுக்கென்று சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதாவது மிடில் பெர்த்தில் உள்ளவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். அதன் பிறகு தூங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அதாவது மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த்தை மடக்கிவிட வேண்டும். ஆனால் இரவு 10 மணி முதல் காலை 6 வரை அவர்களை யாரும் தொந்தரவு செய்ய முடியாது. அதனால் நீங்கள் ரயில்களில் பயணிப்பவராக இருந்தால் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here