மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – காலக்கெடு நீட்டிப்பு!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - காலக்கெடு நீட்டிப்பு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - காலக்கெடு நீட்டிப்பு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – காலக்கெடு நீட்டிப்பு!

இந்தியாவில் பிரதமரின் கிசான் பயனாளிகள் வருடம் தோறும் கிசான் திட்டத்தொகையை பெற தவறாது இ-கேஒய்சி செயல்முறைகளை கட்டாயம் செய்ய வேண்டும். இதற்கு காலக்கெடு மே 22 ஆம் தேதி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிசான் திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த நிதி வரவு வைக்கப்படுகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019 -2020 நிதியாண்டில் மட்டும் ரூ.75,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும்.

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் 1 மணி நேரம் கூடுதலாக செயல்படும் – அரசு அறிவிப்பு!

இதுவரை பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் 10 தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தவணையை பெற தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் கேஒய்சி செயல்முறைகளை செய்ய வேண்டியதும் அதன் விவரங்களை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது இ-கேஒய்சி செயல்முறைகளை முடிக்க ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான காலக்கெடு 2022 மே 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62,000/- ஊதியத்தில் அரசு வேலை !

காலக்கெடுவின் சமீபத்திய நீட்டிப்புக்குப் பிறகு, பிஎம்-கிசான் போர்ட்டலில் இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கான விருப்பம் கிடைக்காது. அதனால் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக அருகிலுள்ள சிஎஸ்சி மையங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிபி வழியிலான ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!