12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் உத்தரவு!

0
12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் உத்தரவு!
12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் உத்தரவு!

12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் உத்தரவு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் எவரேனும் உயர்கல்வி தொடராமல் உள்ளனரா என்பது குறித்த தகவல்களை தயார் செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை திட்ட இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

உயர்கல்வி:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டு (2022-2023) வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் உயர்கல்வி தொடராமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) உயர் கல்வியில் சேர்ந்துள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும்.

இதனை தொடர்ந்து உயர் கல்வியில் சேரவில்லையெனில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு எந்த காரணத்திற்காக உயர் கல்வியில் சேர இயலவில்லை என கண்டறிய வேண்டும் என சுற்றிறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திட தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் உயர்கல்வியில் இதுவரை சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாநில திட்ட இயக்ககத்தில் இருந்து ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்… பள்ளிகளுக்கு விடுமுறை!

Exams Daily Mobile App Download

அத்துடன் மாணவர்களின் மதிப்பெண், தொலைப்பேசி எண், EMIS எண், கல்வி மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களை மாநில திட்ட இயக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!