
பெண்களுக்கான முக்கிய அறிவிப்பை விடுத்த மத்திய அரசு.. மகிளா சம்மான் திட்டம் – நீதியமைச்சர் அறிவிப்பு!!
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
மத்திய பட்ஜெட்:
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று முதல் தொடங்கியது. இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கினார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் சிறுசேமிப்பு குறித்த அறிவிப்பில் பெண்களுக்கான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings Certificate) என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
வெளியான அறிவிப்பு.. வருமான வரிக்கான உச்ச வரம்பு உயர்வு – புதிய வரி விகிதம்! முழு விவரம் உள்ளே!
இந்த சேமிப்பு திட்டமானது ஒரு முறை மட்டும் முதலீடு செய்வதற்கான சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தால் 7% என்ற நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் பெண்களுக்கான மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தில் உள்ள தொகையில் பாதி தொகையை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம் என மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.