கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்களில் மாற்றம்!
இந்தியாவின் பொதுத்துறை வங்கித்துறையான கனரா வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களின் FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. அதன் கீழ் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையுள்ள FD கணக்குகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
சமீப காலமாக வங்கித்துறையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் சிறிய நிதி வங்கிகள் அனைத்தும் பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இதனுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் IFSC கோடுகளும் மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் ATM பரிமாற்ற சேவைகளின் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டது. இதனிடையே கொரோனா பேரிடர் காலத்திலும் சில வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த சேவைகளில் மாற்றங்களை அறிவித்திருந்தது.
தமிழக அரசின் ‘மானிய விலை இரு சக்கர வாகனம்’ திட்டம் – பாஜக வலியுறுத்தல்!
அந்த வரிசையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தனது FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்களில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன் கீழ் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையுள்ள 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பல்வெறு FD வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளது. இவை கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான புதிய வட்டி விகிதங்களுடன் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் திருத்தப்பட்ட வட்டி விகிதங்களை பொருத்தளவு, 7 முதல் 45 நாட்கள் வரையிலான FD வட்டி விகிதம் 2.90%, 46 முதல் 90 நாட்கள் வரையிலான FD வட்டி விகிதம் 3.90%, 91 முதல் 179 நாட்கள் வரையிலான FD வட்டி விகிதம் 3.95%, 180 நாட்கள் முதல் 1 ஆண்டு வரையிலான FD வட்டி விகிதம் 4.40%, 1 ஆண்டுக்கான வட்டி விகிதம் 5.10%, 1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான FD வட்டி விகிதம் 5.10%, 2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரையிலான FD வட்டி விகிதம் 5.10%, 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான FD வட்டி விகிதம் 5.25%, 1111 நாட்களுக்கான வட்டி விகிதம் 5.35% மற்றும் 5 முதல் 10 ஆண்டு வரையிலான வட்டி விகிதம் 5.25% ஆகும்.