IPL 2022 : முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாக தோனியின் CSK அணி – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2022 : முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாக தோனியின் CSK அணி - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022 : முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாக தோனியின் CSK அணி - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022 : முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாக தோனியின் CSK அணி – ரசிகர்கள் உற்சாகம்!

எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து மதிப்பு பதிவுகளையும் முறியடித்து இப்போது இந்தியாவின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இதனால் CSK அணியின் மதிப்பு தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது.

முதல் யுனிகார்ன் நிறுவனம்:

MS தோனி தலைமையிலான 4 முறை IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த சீசனில் களம் இறங்குவதற்கு முன்பே பெரிய சாதனைகளை படைக்க ஆரம்பித்துள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி நேற்று சிஎஸ்கே இந்தியாவின் முதல் விளையாட்டு யுனிகார்னாக மாறியுள்ளது. CSK யின் சந்தை மூலதனம் இப்போது 7,600 கோடிகளைத் தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து GRAY சந்தையில் அவர்களின் பங்குகள் 210-225 விலையில் சாதனை விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது முதல் விளையாட்டு யுனிகார்ன் இடத்தை பிடித்துள்ளது.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – கணக்கு தொடங்குவது எப்படி? முழு விபரம் இதோ!

இது மட்டுமின்றி சிஎஸ்கே மற்றொரு பெரிய சாதனையை முறியடித்துள்ளது. CSK இன் தற்போதைய சந்தை மதிப்பு அதன் ஸ்பான்ஸர் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸின் சந்தை மூலதனத்தை விட அதிகமாக உள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி சந்தையின் பங்கு மதிப்பின்படி முன்னணி சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 6,869 கோடியாக இருந்தது. CSK இன் சந்தை-மூலம் தற்போது சுமார் 7.600 கோடியாக உள்ளது. இது மற்ற நிறுவனங்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. CSK கடந்த சீசனில் ஐபிஎல் பட்டத்தை வென்றது. அது CSK வின் சந்தை பங்கு விலையை அதிகரிக்க வழிவகுத்தது.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

சஞ்சீவ் கோயங்காவுக்குச் சொந்தமான RPSG குழுமம் ஐபிஎல்லின் லக்னோ உரிமையை 7,000-கோடி மற்றும் ஏலத்தில் வாங்கிய பிறகும் மற்றும் CVC கேபிடல் 5,625 கோடிக்கு அகமதாபாத் உரிமையை வாங்கிய பிறகும் CSK பங்கு விலை மேலும் உயர்ந்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியின் வாரத்தில் இந்த பங்கு ரூ.110-120 ஆக இருந்தது ஆனால் தற்போது ரூ.210-225 விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. முறையாக சந்தையில் 3 மாதங்களுக்கு முன்பு ஸ்கிரிப் ரூ.90-100க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 2018 நவம்பரில் ரூ.12-15 என்ற அளவில் இருந்த சிஎஸ்கே பங்கு விலை, மூன்றே ஆண்டுகளில் 2,000 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!