EPFO பயனர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

0
EPFO பயனர்கள் கவனத்திற்கு - UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
EPFO பயனர்கள் கவனத்திற்கு - UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
EPFO பயனர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள், கொரோனா சிகிச்சைக்கான பணத்தை பெறுவதற்கு முன்கூட்டியே கோரிக்கையை தாக்கல் செய்யலாம். இதற்கான தகுதி, திரும்பப் பெறுதல் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

EPFO சேவை

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சைக்கான பணத்தை EPFO உறுப்பினர்கள் முன்கூட்டியே பெறுவதற்கான வசதிகளை EPFO அமைப்பு வழங்குகிறது. இதற்காக பயனர்கள் முன்கூட்டியே கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு!

அந்த வகையில் இப்போது கொரோனா தொற்றுநோய் சிகிச்சைக்கான முன்பணத்தைப் பெறுவதற்கான வசதியை பயனர்கள் epfindia.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான ஏதேனும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால், ஆர்வமுள்ள நபர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது கொரோனா சிகிச்சைக்கான முன்பணம் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என்பதை பயனர்கள் அறிந்திருக்க வேண்டும். இதற்கான தகுதி, திரும்பப் பெறுதல் உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

தகுதி:

EPF திட்டத்தில், 1952 இல் UAN உடன் பணிபுரியும் மற்றும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பணிபுரிந்து, EPF மற்றும் MP சட்டம், 1952 இன் கீழ் உள்ள ஒவ்வொரு பணியாளர்களும் கொரோனா முன்பணம் பெறும் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

  • UMANG செயலி மூலம் கொரோனா முன்பணத்தை தாக்கல் செய்ய:
  • ஆர்வமுள்ள நபர்கள் UMANG செயலி மூலம் கோவிட்-19 உரிமைகோரலைப் பதிவு செய்யலாம்.
  • முதலில், UMANG செயலியை திறக்க வேண்டும்
  • அதில் EPFO சேவையை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • பின்னர், Request for Advance (COVID-19) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்போது, UAN விவரங்களை உள்ளிட்டு, ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து, OTP ஐ உள்ளிட்டு உள்நுழை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • உள்நுழைந்த பிறகு, EPFO உறுப்பினர் தனது வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிட வேண்டும்.
  • மேலும் மெனுவிலிருந்து உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்ததாக, Click on proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  • முகவரியை உள்ளிட்டு Next என்பதை கொடுக்கவும்.
  • இறுதியாக, பயனர் காசோலை படத்தையும் அதில் அச்சிடப்பட்ட கணக்கு எண் மற்றும் பெயரையும் பதிவேற்ற வேண்டும்
  • அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, கோரிக்கை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!