இந்திய தலைநகர் டெல்லியில் பட்டாசு பயன்படுத்த தடை – காற்று மாசுபாடு எதிரொலி!

0
இந்திய தலைநகர் டெல்லியில் 2023 வரை பட்டாசுக்கு தடை - காற்று மாசுபாட்டின் எதிரொலி!
இந்திய தலைநகர் டெல்லியில் 2023 வரை பட்டாசுக்கு தடை - காற்று மாசுபாட்டின் எதிரொலி!
இந்திய தலைநகர் டெல்லியில் பட்டாசு பயன்படுத்த தடை – காற்று மாசுபாடு எதிரொலி!

இந்தியாவில் தலைநகர் டெல்லியில் தற்போது காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் பட்டாசுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டாசு விற்பனையாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு:

டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கனவே மக்கள் பல வியாதிகளுக்கு ஆளாகி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது காற்று மாசுபட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு மற்றும் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு காலத்தில் டெல்லியில் நிலவிய காற்று மாசுபாட்டால் 57,000 பேர் உயிரிழந்ததாக ஆய்வு தகவல்கள் கூறுகிறது. அதனால் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்ததை விட காற்றில் உள்ள பி எம் 2.5 செறிவு அதிகமாக உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இந்த காற்று மாசுபாட்டுக்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு காரணங்கள் உள்ளது. அதில் ஒன்று பட்டாசு வெடித்தல். மருந்து பொருட்களால் செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரநிலை மோசமாகிறது. அதனால் டெல்லி அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்தது. குறிப்பாக மக்கள் தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவு பட்டாசுகளை வெடிப்பர்.

Aadhar உடன் மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறை!

அதனால் டெல்லி அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்தது. அதே போல இந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், அதனை வெடிக்கவும் டெல்லி அரசு 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பட்டாசு விற்பனையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு இல்லாமல் களையிழந்து காணப்படும் என்று குழந்தைகளும் பொதுமக்களும் கவலையில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here