Aadhar உடன் மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறை!

0
Aadhar உடன் மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறை!
Aadhar உடன் மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறை!
Aadhar உடன் மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறை!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இத்துடன் மொபைல் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த செயல்முறையை ஆன்லைன் முறையில் செய்யும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை:

இந்திய நாட்டில் வசிக்கும் மக்களின் தனித்துவமான அடையாளமாக ஆதார் இருந்து வருகிறது. தற்போது இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுவதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு இத்தகைய செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு முன்பு அறிவித்திருந்தது.

மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த பணிகள் அரசு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை எவ்வாறு மாற்றுவது மற்றும் புதிய இணைப்பு குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரில் மொபைல் எண் மாற்றம் செய்ய அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து அங்குள்ள புதுப்பிப்பு அல்லது திருத்தம் என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பிறகு விண்ணப்பத்தை நன்றாக சரிபார்த்தவுடன் ஆதார் நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சேவைக்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – முக்கிய உத்தரவு!

பிறகு புதுப்பிப்பு கோரிக்கை எண் உள்ள ஒரு ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி அளிப்பார். இந்த URN எண்ணை வைத்து உங்களது விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் புதிதாக அளிக்கப்பட்ட மொபைல் எண் 90 நாட்களுக்குள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும். இதே போல் மொபைல் எண்ணை ஆதாரில் இணைக்க அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இப்பொழுது ஆதாருடன் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை படிவத்தில் இணைத்து ஆதார் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு உங்கள் விவரங்களை பயோ மெட்ரிக் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தி அங்கீகரிப்பார். இந்த சேவைக்கும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here