மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு – 600+ காலியிடங்கள்! ரூ.88,000 வரை சம்பளம்!

0
மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு - 600+ காலியிடங்கள்! ரூ.88,000 வரை சம்பளம்!
மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு - 600+ காலியிடங்கள்! ரூ.88,000 வரை சம்பளம்!
மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு – 600+ காலியிடங்கள்! ரூ.88,000 வரை சம்பளம்!

இந்திய நிறுவனத்தில் காலியாக இருக்கும் விஞ்ஞானி பதவிகளுக்கு இப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த பதவிகளுக்கான விண்ணப்ப முறை, கட்டணங்கள், கல்வித்தகுதி ஆகியவற்றை இப்பதிவில் விரிவாக காணலாம்.

விஞ்ஞானி வேலைவாய்ப்பு

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), மத்திய அரசுத் துறையின் கீழ் உள்ள முதன்மையான நிறுவனமாகும். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மற்றும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) ஆகியவற்றில் காலியாக இருக்கும் 630 விஞ்ஞானி காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்த அறிவிப்பில், DRDO அமைப்பில் விஞ்ஞானி B மற்றும் பொறியாளர் B ஆகிய இரு பதவிகளுக்கும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டுள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.88,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பதவிக்கான கல்வித்தகுதி, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:
  • பொறியியல் அல்லது அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இறுதியாண்டு தேர்வு எழுதும் அல்லது தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
  • பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து அறிவியலில் முதல் வகுப்பு முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பட்டப்படிப்பில் முதல் வகுப்பு/பிரிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் மட்டும் DSTன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் EQ பட்டம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் டெல்லியில் இருந்து அதற்கு சமமான சான்றிதழை பெற்ற பின்னர் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

FD வட்டி விகிதங்கள் உயர்வு – வாடிக்கையாளர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 630 காலியிடங்களில், டிஆர்டிஓவில் 579 காலியிடங்களும், டிஎஸ்டியில் எட்டு காலியிடங்களும், ஏடிஏவில் 43 காலியிடங்களும் இருக்கின்றன.

தேர்வு முறை:

சரியான கேட் மதிப்பெண், எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.

வயது வரம்பு:

பணியிடங்கள் மற்றும் வயது வரம்புகளின் துறை வாரியான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப முறை:
  • ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் RAC இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:

பொது, OBC மற்றும் EWS ஆண் வேட்பாளர்கள் திரும்பப்பெறாத மற்றும் மாற்ற முடியாத விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.

நேர்காணல்:
  • பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை மற்றும் நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்தை RAC இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • இது தொடர்பான அறிவிப்பு விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
  • எழுத்துத் தேர்வுக்கான அட்மிட் கார்டு அல்லது நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்படாது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளவும்.
முக்கிய நாட்கள்:

எழுத்துத் தேர்வு 16 அக்டோபர் அன்று நடைபெறும்.

குறிப்பு:

இந்த விண்ணப்பம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தொலைபேசி எண் 011-23889528 அல்லது அல்லது [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!