FD வட்டி விகிதங்கள் உயர்வு – வாடிக்கையாளர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

0
FD வட்டி விகிதங்கள் உயர்வு - வாடிக்கையாளர்களுக்கான ஹாப்பி நியூஸ்!
FD வட்டி விகிதங்கள் உயர்வு - வாடிக்கையாளர்களுக்கான ஹாப்பி நியூஸ்!
FD வட்டி விகிதங்கள் உயர்வு – வாடிக்கையாளர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பல்வேறு வகையான வங்கிகள் டெபாசிட் திட்டங்களின் வட்டியை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது மற்றொரு நிறுவனம் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வட்டி உயர்வு

இந்தியாவில் தற்போது பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் விலையேற்றத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அதன்படி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த ஜூன் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்புக்கு பிறகு ரெப்போ விகிதம் 4.40% லிருந்து 4.90% ஆக தற்போது உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது, வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும் போது அந்த தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதனால் வங்கிகள் தங்களின் கடன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கின்றன. அதன்படி தற்போது பெரும்பாலான வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை நிம்மதி அடைய செய்யும் வகையில் பல்வேறு வங்கிகள் தங்களின் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.

இந்திய கடற்படையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்…!

அந்த வரிசையில் தற்போது, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஃபிக்சட் டெபாசிட்டு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அத்துடன் இந்த புதிய வட்டி விகிதம் நாளை முதல் (ஜூலை 1) அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதத்தின்படி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம்:
  • 12 முதல் 23 மாதம் வரையிலான FD திட்டம் – ஆண்டுக்கு 6.2% வட்டி விகிதம்.
  • 15 மாத FD திட்டம் – ஆண்டுக்கு 6.4% வட்டி விகிதம்.
  • 44 மாத FD திட்டம் – ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம்.
  • 12 முதல் 23 மாதம் வரையிலான சீனியர் சிட்டிசன்களுக்கு FD திட்டம் – ஆண்டுக்கு 6.45% வட்டி விகிதம்.
  • 44 மாத சீனியர் சிட்டிசன்களுக்கு FD திட்டம் – ஆண்டுக்கு 7.75% வட்டி விகிதம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!