விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' வில்லி பரினா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' வில்லி பரினா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை பரினா

தமிழ் சின்னத்திரை சீரியல் மூலம் ஒரு சிறந்த வில்லியாக ரசிகர்களின் மனங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா நடிகை பரினா தான். விஜய் டிவியில் ஒரு நடிகையாக வருவதற்கு முன்பாக நம்மில் பலரும் டிவி சேனல்களில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகை பரினாவை அறிந்திருப்போம். நடிப்புக்கும் தனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்று நடிப்பை விட்டு தூர விலகி இருந்த பரினா தற்போது பயங்கரமான வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

“என் கனவு ஆசை எதிர்காலம் பற்றி நினைக்கவில்லை” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

அந்த வகையில் நடிகை பரினாவை ஒரு சிறந்த நடிகையாக அதுவும் வில்லியாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது இந்த ‘பாரதி கண்ணம்ம’ சீரியல். மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக நடிப்பதற்கு ரசிகர்களிடம் இருந்து இவர் வாங்கிய ஏச்சுகளும், பேச்சுகளும் ஏராளம். இருந்தாலும் தனது பிரசவ நேரத்தில் கூட சீரியலை விட்டு விலகாமல் கடைசி வரையும் மக்களை மகிழ்வித்த பெருமை நடிகை பரினாவையே சாரும்.

விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி – ப்ரோமோ ரிலீஸ்!

இப்போது குழந்தை பிறப்பிற்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெண்பாவாக அதிரடி காட்டி வரும் நடிகை பரினா அவ்வப்போது சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியின் ‘ஸ்டார்ட் மியூஸிக்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பரினா அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தற்போது ஸ்டார்ட் மியூஸிக் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோவையும் அவர் ரசிகர்களுடன் ஷேர் செய்ய அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!