விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக, சீரியல் நடிகைகளின் ரீல் மாமியார் மற்றும் ரியல் மாமியார்களுக்கு இடையே ஒரு கலகலப்பான போட்டி நடைபெற்றுள்ளது. இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பொங்கல் ஸ்பேஷல்

பொதுவாக பண்டிகை காலங்கள் என்றாலே டிவி சேனல்களில் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இந்த ஆண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு டிவி சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதிய புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பலவற்றை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இவற்றில் வித்தியாசமான அம்சத்துடன் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து மக்களை கவர்ந்து வரும் விஜய் டிவி, இம்முறையும் சில ஸ்வாரசியமான போட்டிகளை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

13 ஆண்டு திருமண வாழ்க்கை, இரண்டாவது பெண் குழந்தை – நடிகை நீலிமாவின் பயணம்!

அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளின் ரீல் மற்றும் ரியல் மாமியார்கள் என பலரும் ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பித்துள்ளனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்க்கிறது. இதில் சீரியல் நடிகைகள் ஜாக்குலின், பவித்ரா, ஸ்ரீநிதி தங்களது ரீல் மாமியார்களுடன் கலந்து கொள்ள நடிகை காயத்ரி, வைஷாலி, பாடகி ராஜலட்சுமி ஆகியோர் ரியல் மாமியார்களுடன் கலந்து கொண்டுள்ளனர்.

கர்ப்பமான கண்ணம்மாவுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாரதி – ரசிகர்கள் உற்சாகம்!

இதனை மேலும் சிறப்பிக்கும் விதமாக விஜய் ஸ்டார்ஸ் மதுரை முத்து, பாலாஜி, ராமர் ஆகியோரும் நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த ‘சபாஷ் சரியான போட்டி’ ஷோவை தொகுத்து வழங்குவது பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் மற்றும் விஜே அர்ச்சனா ஆவர். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஃபன் மற்றும் கலாட்டாக்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் ஜனவரி 14ம் தேதி மதியம் 1 மணியளவில் விஜய் டிவியில் இதனை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here