‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா வெளியிட்ட குழந்தையின் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லியான வெண்பாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் போது துள்ளி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சீரியல்களில் டாப் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் அருண், வினுஷா, ரூபாஸ்ரீ, ரிஷி, கண்மணி, சுகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். பாரதியாக அருண் நடிக்க கண்ணம்மா கதாபாத்திரத்தில் புதிதாக வினுஷா நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மாவை 8 வருடங்களாக சேர விடாமல் சதி செய்யும் வில்லியாக வெண்பா இருக்கிறார். ஆனால் அவர் ஜெயிலில் இருக்கும் நேரம் பார்த்து பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
Vijay TV Bigg Boss 5 Promo | அபிநய், தாமரைக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்! ரசிகர்கள் ஷாக்!
வெண்பா கதாபாத்திரத்தில் பரீனா நடித்து வருகிறார். அவர் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்தது முதல் அவர் பிரசவத்திற்கு 2 வாரங்கள் முன்னர் வரை சீரியலில் நடித்து வந்தார். அதனால் அவருக்கு பாராட்டுக்கள் பல கிடைத்தது. மேலும் சீரியலில் அவரை நீக்காமல் கதையில் மாற்றம் செய்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு குழந்தை பிறந்து சில வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் ஒரே ஒரு போட்டோஷூட்டில் பழைய பொலிவுடன் அவர் போஸ் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் நிறைமாதமாக இருக்கும் போது தனது குழந்தை வயிற்றில் செய்த சேட்டைகளை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த வீடியோவை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார். அந்த அழகான வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.