Vijay TV Bigg Boss 5 Promo | அபிநய், தாமரைக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்! ரசிகர்கள் ஷாக்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | அபிநய், தாமரைக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்! ரசிகர்கள் ஷாக்!
Vijay TV Bigg Boss 5 Promo | அபிநய், தாமரைக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்! ரசிகர்கள் ஷாக்!
Vijay TV Bigg Boss 5 Promo | அபிநய், தாமரைக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று நடைபெறும் வெற்றி கொடிக்கட்டு டாஸ்கில் போட்டியாளர்கள் அபிநய் மற்றும் தாமரை இருவரும் முட்டி மோதிக்கொள்வது போல 2வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

இந்த வாரத்திற்கான ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான களத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக மாறி போட்டிக்களம் கண்டு வருகின்றனர். இந்த வித்தியாசமான கெட்அப்களுடன் அரசியல்வாதியாகவே மாறி இருக்கும் போட்டியாளர்கள் மக்களை வழக்கம் போல என்டர்டைன் செய்ய துவங்கியுள்ளனர்.

டிக்டாக் புகழ் ஜிபி முத்துவுக்கு ஏற்பட்ட சோகம் – கதறி அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!

இதற்கு மத்தியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நேற்று நடத்தப்பட்ட வெற்றிகொடிக்கட்டு டாஸ்கின் 2ம் பாகம் இன்றும் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு கட்சியை குறிக்கும் வகையில் வெவ்வேறு விதமான 20 கொடிகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது அந்த கொடியை வைத்து ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆதிக்கத்தை காட்ட, கார்டன் ஏரியாவில் கொடுக்கப்பட்டுள்ள பைப் மீது கொடியை பொறுத்த வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது குழுவுடன் இணைந்து கொண்டு தங்களுக்குரிய கொடிகளை ஏற்ற அந்த பைப்களை எடுக்க முற்படுகின்றனர். இதற்கு மத்தியில் சில போட்டியாளர்களுக்குள் தள்ளு முள்ளுவும் ஏற்படுகிறது. அந்த வகையில் போட்டியாளர் அபிநய் மற்றும் தாமரை செல்விக்கு இடையே சில தகராறு ஏற்பட, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்தவாறு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அபிநய் மற்றும் தாமரை இருவரும் கத்திக்கொண்டு சண்டையிட இந்த வாரத்திற்கான மோதல் காட்சிகள் ஆரம்பமாகி இருக்கிறது தெளிவாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!