அபி டைலர் தொடரில் இருந்து விலகிய பரினா – அவரே வெளியிட்ட பதிவு-அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
அபி டைலர் தொடரில் இருந்து விலகிய பரினா - அவரே வெளியிட்ட பதிவு-அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அபி டைலர் தொடரில் இருந்து விலகிய பரினா - அவரே வெளியிட்ட பதிவு-அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அபி டைலர் தொடரில் இருந்து விலகிய பரினா? அவரே வெளியிட்ட பதிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பரினா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா மற்றும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் ஆகிய இரு தொடரிலும் நடித்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது அபி டைலர் தொடரில் இருந்து விலகப் போவதாக பரினா தெரிவித்துள்ளார்.

அபி டைலர் தொடர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் வெண்பாவிற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆலியாவின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட ‘ராஜா ராணி சீசன் 2’ குழுவினர் – வைரலாகும் வீடியோ!

வெண்பா செய்யும் சூழ்ச்சியால் தான் பாரதி கண்ணம்மா தொடர் இத்தனை ஆண்டுகளாக ஓடி கொண்டிருக்கிறது. வெண்பா கர்ப்பமாக இருந்த நிலையிலும் கூட பாரதி கண்ணம்மா தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். அதே போல குழந்தை பிறந்து சில நாட்களிலேயே பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்து கொண்டார். இவரது மன தைரியத்தை பலரும் பாராட்டினார். குழந்தை பிறந்த பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் தொடரிலும் நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் அபி டைலர் என்கிற இரு சீரியலிலும் நடிக்க முடியாத காரணத்தினால் அபி டைலர் தொடரில் இருந்து வெண்பா விலகியுள்ளார். ரசிகர்களும் வெண்பா வெளியேறுவது குறித்து வருத்தத்தை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது பரினாவே வாய்ப்பளித்த புரொடக்ஷன் நிறுவனத்திற்கும், முழு ஒத்துழைப்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி என ஒரு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here