மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை – குஷியில் ரசிகர்கள்!

0
மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை - குஷியில் ரசிகர்கள்!
மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை - குஷியில் ரசிகர்கள்!
மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை – குஷியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா தமிழ்செல்வி. இந்நிலையில் கடந்த சில எபிசோடுகளில் இவரது காட்சிகள் இடம் பெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் இவர் சீரியலில் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடம் பிடித்து வருகிறது. மேலும் எதார்த்தம் நிறைந்த குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் செல்வதால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் அமிர்தா ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா. இவர் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர். இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடிக்கத் தொடங்கினார். தற்போது இவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா ரோல் அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில எபிசோடுகளில் கோபி, ராதிகா காதல் பற்றிய உண்மை பாக்கியாவுக்கு தெரிந்த நிலையில் கோபி வீட்டை விட்டு வெளியே போகிறார். பிறகு கோபியின் காதல் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிறது. இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்கிறார். மேலும் கோபியை வீட்டை விட்டு வெளியே போகுமாறு சவால் விடுகிறார். இதை தொடர்ந்து கோபியின் அம்மா ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு சென்று சண்டை போடுவது போல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த பிரச்சனைகளில் கதை தொடர்வதால் எழில்- அமிர்தாவின் காட்சிகள் சில வாரங்களாக இடம் பெறவில்லை.

தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தவாக வரும் நடிகை ரித்திகா வெறும் ஒரு சப்போர்டிங் ரோலாக வலம் வராமல் கணவனை இழந்த ஒரு பெண் குழந்தையுடன் படும் கஷ்டங்களையும், மறுமணம் செய்து கொள்வதில் இருக்கும் சமூக சிக்கல்களையும் கண்முன் காட்டுகிறார். மேலும் இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் மிக ஆர்வமுடன் போட்டோ, வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் சீரியலில் எழில்- அமிர்தா காட்சிகள் எப்போது இடம்பெறும் என்று ரசிகர்கள் தொடர்ந்து ரித்திகாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here