தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 'இந்த' மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 'இந்த' மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்:

23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள்‌ புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள்‌ புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌
ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌
ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்‌சியஸ்‌ ஒட்டி இருக்கக்கூடும்‌. குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

23.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TN TRB தேர்வர்களின் தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் – கால அவகாசம் நீட்டிப்பு!

24.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌ மற்றும்‌ மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

26.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!