விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்தடுத்து வர இருக்கும் திருப்பங்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா தவறு செய்யவில்லை என அம்மன் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இனி வரும் வாரங்களில் அதிரடி திருப்பங்கள் நடைபெற இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்ற முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியல் அதிரடி திருப்பங்களுடன் தற்போது சென்று கொண்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவின் படி பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கண்ணம்மா மீது வெறுப்பில் இருந்த பாரதி தற்போது கண்ணம்மாவின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தை பார்த்து மனம் மாறி வருகிறார். இருந்தாலும் அவருடைய மனசாட்சி இடை இடையே தடுக்க கண்ணம்மாவை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையில் நீதிகாத்த அம்மன் கோவிலுக்கு செல்ல அங்கே கண்ணம்மா பக்கம் நீதி இருப்பதாக வருகிறது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மாவின் 10வது திருமண நாள் அன்று சௌந்தர்யா வீட்டில் பூஜை ஒன்றை செய்ய இருக்கிறார். பாரதி மற்றும் கண்ணம்மா அதில் கலந்து கொள்ள இருப்பதால் குழந்தைகளை வெளியே கூட்டி செல்ல சௌந்தர்யா திட்டமிட்டு இருக்கிறார். வெண்பா இந்த பூஜையை நிறுத்துவாரா அகில் அஞ்சலியை கடத்தியவனை கண்டுபிடிப்பாரா பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொண்டு இருப்பாரா என ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது.
DNA டெஸ்ட் எடுத்த பாரதி, அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த எபிசோட்!
இது குறித்து இனி வரும் வாரங்களில் தெரிய வர இருக்கிறது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் ஆனால் பாரதி கடைசி வரை DNA டெஸ்ட் எடுப்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சில செய்திகளில் கண்ணம்மாவை பாரதி ஏற்றுக் கொள்வார் எனவும் ஆனால் லட்சுமி அந்த வருணிற்கு பிறந்த குழந்தை தான் என உண்மையை கண்ணம்மா ஒப்புக் கொண்டால் பாரதி சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக சொல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.