DNA டெஸ்ட் எடுத்த பாரதி, அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த எபிசோட்!

1
DNA டெஸ்ட் எடுத்த பாரதி, அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட் - 'பாரதி கண்ணம்மா' சீரியல் அடுத்த எபிசோட்!
DNA டெஸ்ட் எடுத்த பாரதி, அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த எபிசோட்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் இத்தனை நாட்களாக எதிர்பார்த்த தருணம் வந்துள்ளது. பாரதி DNA டெஸ்ட் எடுக்க சம்மதித்து உள்ளார். இதனால் இனி வரும் திருப்பங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

DNA டெஸ்ட்:

பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை வருடங்களாக கண்ணம்மா மீது கொண்ட சந்தேகத்தின் காரணமாக தான் பாரதி கண்ணம்மா மீது கோவமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் கண்ணம்மாவிடம் இருந்து முழுவதுமாக பிரிந்து எந்த ஒட்டு உறவும் இருக்க கூடாது என்று நினைத்து பாரதி, நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்பார். இவர்களின் பிரச்சனைகளை விசாரித்த நீதிபதி இருவருக்கும் புரிதல் தான் தேவை, இருவரும் குறைந்த பட்சம் 6 மாதம் ஒரே வீட்டில் வாசிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை திட்டம்!

இதனை சற்றும் எதிர்பார்க்காத பாரதி வெறுப்புடன் தான் கண்ணம்மா வீட்டில் இருக்க ஒத்துக்கொள்கிறார். ஆனால் இருவருக்கும் தெரியாமலேயே நாளடைவில் ஒருவர் மீது இருக்கும் கோவம், மற்றொருவருக்கு குறைகிறது. இதனால் இருவரும் அதிகம் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் பாரதியின் நண்பர் மூலம் தெரிந்து கொண்ட நீதி காத்த அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் சடங்கு பற்றி யாருக்கும் கூறாமல் அனைவரையும் அங்கு அழைத்து சென்று பொங்கல் வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால் அருள்வாக்கு கூறும் நபர் கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்றும், கண்ணம்மா நல்லவள் என்றும் கூறியதை அடுத்து கண்ணம்மா இப்போ என்ன செய்ய போறீங்க? எப்போ DNA டெஸ்ட் எடுக்க போறீங்க? என்று பாரதியை கேட்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – மீண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்!

இதனால் மிகவும் குழப்பத்தில் இருக்கும் பாரதி ஒரு வழியாக DNA டெஸ்ட் எடுக்க ஒத்துக் கொள்கிறார். இனி வரும் நாட்களில் அந்த ரிப்போர்ட் பற்றி தெரிய வருகிறது. அதில், பாரதிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து உடல் தகுதிகளும் இருப்பதாகவும், ஒரு குழந்தை இல்லை எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாரதி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

  1. இந்த பாரதிகண்ணம்மா என்ன நடந்தா எங்களுக்கு என்ன அவங்க பிச்சை எடுத்துட்டு இருக்கோம் டெய்லி சம்பளம் மணி நேரம் வேலை கிடைக்கும் டெய்லி வருமானம் ஒரு லட்சம் கிடைக்கும்எங்கடா போற எங்கள மாதிரி பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!