மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குடும்ப ஓய்வூதியம் குறித்த விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - குடும்ப ஓய்வூதியம் குறித்த விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - குடும்ப ஓய்வூதியம் குறித்த விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குடும்ப ஓய்வூதியம் குறித்த விளக்கம்!

அரசாங்க ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து குடும்ப ஓய்வூதியத்தை பெறலாம் என்று ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம்

மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குடும்ப ஓய்வூதியம் குறித்த முக்கியமான விளக்கத்தை அரசாங்கம் இரண்டு ஆதாரங்களில் இருந்து வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 2021ல் இரண்டு வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் இரண்டு குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவது குறித்து ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – இது சரியான முடிவா?

இது தொடர்பாக மே 23ல் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பில், ‘ஒரே அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரைப் பொறுத்தமட்டில் இரண்டு வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து குடும்ப உறுப்பினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021ல் எந்தத் தடையும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு வெவ்வேறு அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்ததன் விளைவாக குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையானது, மத்திய அரசுப் பணிகளின் துணை விதி 12(a) மற்றும் துணை விதி 13 ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’ என்று DoPPW தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக, மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 1972க்குப் பதிலாக 2021 டிசம்பர் 20ஆம் தேதி மத்திய சிவில் சேவை விதிகள் 2021ஐ அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, ஒரே அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர், குடும்ப ஓய்வூதியத்திற்கான குடும்ப உறுப்பினர்களின் உரிமையைப் பற்றி இரண்டு வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து விளக்கம் கோரும் வலியுறுத்தல்களை பெற்ற பிறகு அரசாங்கத்திடம் இருந்து இந்த தெளிவுபடுத்தல் வந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!