தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வேலை தொடர்பான போலி தகவல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வேலை தொடர்பான போலி தகவல் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வேலை தொடர்பான போலி தகவல் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வேலை தொடர்பான போலி தகவல் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வேலை தொடர்பான போலி தகவல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கூட்டுறவுத்துறையில் காலியாகவுள்ள பணியிடம் குறித்தான போலியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற போலியான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டுறவுத்துறை:

கூட்டுறவுத்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர வேலையாட்கள் தேவை என சமூக வலைப்பக்கங்களில் செய்தி பரவி வருகிறது. அதாவது, http:www.olx.in என்கிற இணையதள முகவரியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய வேலையாட்கள் தேவை எனவும், மாத சம்பளம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரைக்கும் வழங்கப்படும் எனவும், சேலம், பவானி, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 35 வயது வரைக்கும் இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடம் குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் 82203-03402, 95970-49997 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்கிற பெயரில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

இதனையடுத்து, இந்த செய்தி குறித்து ஆராய்ந்த போது கூட்டுறவுத்துறையின் கீழோ அல்லது கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலமாகவோ இந்த பதிவு வெளியாகவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இதனால், இது போன்ற போலியான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கூட்டுறவு சங்கங்களில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடம் குறித்தான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here