தமிழ் மொழி தகுதி தேர்வில் ‘இவர்களுக்கு’ விலக்கு – முக்கிய அரசாணை வெளியீடு!

0
தமிழ் மொழி தகுதி தேர்வில் 'இவர்களுக்கு' விலக்கு - முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழ் மொழி தகுதி தேர்வில் 'இவர்களுக்கு' விலக்கு - முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழ் மொழி தகுதி தேர்வில் ‘இவர்களுக்கு’ விலக்கு – முக்கிய அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், மற்றும் இதர தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அரசாணை :

தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே பணிநியமனம் செய்யும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழியை கட்டாயமாக்கி, தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன்படி கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டதாக உள்ள தொகுதி 1, 11 மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது, முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும். மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இத்தேர்வு 100 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிப்பு!

மேலும் கடந்த வாரம், சனிக்கிழமை அன்று தமிழக அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு, மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள தெரிவு முகமைகளால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. 40%க்கும் குறைவான குறைபாடுகளை கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த அரசாணை பொருந்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here