பல்வேறு அரசு பணியிட தேர்வுகள் ஒத்திவைப்பு !!!!

0
பல்வேறு பணியிட தேர்வுகள் ஒத்திவைப்பு - ரத்ததான தேர்வு விவரங்கள்
பல்வேறு பணியிட தேர்வுகள் ஒத்திவைப்பு - ரத்ததான தேர்வு விவரங்கள்

பல்வேறு அரசு பணியிட தேர்வுகள் ஒத்திவைப்பு !!!!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து தரப்பு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகி மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து கல்வி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால் இதற்கிடையே நடக்க இருந்த பல்வேறு பணியிட தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள தேர்வுகளின் விவரங்களை கீழே தொகுத்துள்ளோம்.

இந்திய ராணுவத் தேர்வுத் தள்ளிவைக்கப்பட்டது – மேலும் தகவல்கள்

இந்திய ராணுவத் தேர்வுவான SSB  கொரோனா வைரஸ் தொற்றுதலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணுவத்திற்கான தேர்வுகளையும், நேர்காணல் அனைத்தையும் தள்ளி வைத்து இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC உரிமையியல் நீதிபதி தேர்வுகள் ஒத்திவைப்புமேலும் தகவல்கள்

தமிழக நீதித்துறையில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதி பதவியிடங்கள்  முதன்மை எழுத்துத்தேர்வு வரும் 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது பரவி வரும்  கொரோனா வைரஸ் பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ITBP Constable  தேர்வுகள் ஒத்திவைப்புமேலும் தகவல்கள்

தற்போது பரவி வரும்  கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கான்ஸ்டபிள் பணி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ITBP அதிகாரபூர்வத்தளத்தில் அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இத்தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய Airmen தேர்வு ஒத்திவைப்புமேலும் தகவல்கள்

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள ஏர்மென் பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக ஓத்தி வைத்துள்ளது.

RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு – மேலும் தகவல்கள்

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பின் காரணமாக RBI முதன்மை தேர்வானது ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!