ESIC காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0

ESIC காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Residents பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees’ State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Senior Residents
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walkin
ESIC காலிப்பணியிடங்கள்:

ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் Senior Residents பணிக்கு என்று மொத்தமாக 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

ESIC தகுதிகள்:
  • இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Medical PG Degree / DNB முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Medical Diploma முடித்தவர்கள் இத்துடன் குறைந்தது 2 ஆண்டுகள் மருத்துவ நிறுவனங்களில் பானுபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
ESIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

ESIC ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் மாதம் ஊதியமாக ரூ.1,30,797/-. பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

ESIC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC நேர்காணல் தேதி:

Orthopaedics, General Medicine and Radiodiagnosis துறைக்கு 06.06.2022 ம் தேதி.

Paediatrics, NICU & PICU, Obst .& Gynae and Chest Medicine துறைக்கு 07.06.2022 ம் தேதி.

Anaesthesia, ICU and General Surgery துறைக்கு 08.06.2022 ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நேரடியாக மேலே குறிப்பிட்டுள்ள தேதி அன்று நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!