ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!

0
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!

ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி அறிவிப்பு:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், 4வது போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

T20 உலக கோப்பை 2021 – இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? உத்தேச பட்டியல்!

தற்போது 5வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி முதல் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அணியில் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஓவர்டனும், இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2021 – அமீரகம் சென்ற CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்! ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 290 ரன்கள் குவித்தாலும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியது. இதனால் அணியில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. தொடரில் 2-1 என பின் தங்கி இருப்பதனால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து அணி உள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, பர்ன்ஸ், பட்லர், சாம் கரண், ஹசீப் ஹமீது, லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், ஓவர்டன், போப், ராபின்சன், வோக்ஸ், மார்க் வுட்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!