T20 உலக கோப்பை 2021 – இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? உத்தேச பட்டியல்!

0
T20 உலக கோப்பை 2021 - இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் உத்தேச பட்டியல்!
T20 உலக கோப்பை 2021 - இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் உத்தேச பட்டியல்!

T20 உலக கோப்பை 2021 – இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? உத்தேச பட்டியல்!

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள T20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பர் என்பது குறித்த ஒரு அலசலை இங்கு காணலாம்.

T20 உலக கோப்பை 2021:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது உலகக்கோப்பை தொடர். அதிலும் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகள் காணப்படும். கடந்த 2020ம் ஆண்டில் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

IPL 2021 – அமீரகம் சென்ற CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்! ரசிகர்கள் உற்சாகம்!

வழக்கம் போல இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரே பிரிவில் குரூப் 2 வில் இடம் பெற்றுள்ளன. இவை இரன்டும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதற்கான பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.

ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

இந்திய அணியை பொறுத்தவரை பலம் பொருந்தியதாகவே இருந்தாலும் சரியான அணி கலவை அமையாமல் கிளிக் ஆகாமல் உள்ளது. தொடக்க ஆட்டகாரரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் இடத்தில் இடம் பிடிக்க இளம் வீரர்களிடம் போட்டி ஏற்பட்டு வருகிறது. அதே போல் பந்து வீச்சாளர்கள் இடத்தில் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சு கலவையை கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். இந்தியாவை பொறுத்தவரை T20 போட்டிகளில் எப்போதும் 6 பேட்ஸ்மேன் அல்லது 5 பேட்ஸ்மேனுடன் 2 ஆல் ரவுண்டர்களோடு களமிறங்கும். அவ்வரிசையில் தொடக்கத்தில் ராகுல், ரோஹித், தவான் மூவரில் ஒருவர் வெளியே உட்கார வைக்கப்படுவர்.

T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி – பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!

மிடில் ஆர்டரில் கேப்டன் கோஹ்லியுடன் சூர்யகுமார் யாதவ், பண்ட் ஆகியோர் களமிறங்குவர். அதே போல் ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இடம் பெறுவர். ஐக்கிய அரபு ஆடுகளங்கள் மெதுவான தன்மை கொண்டதால் சுழலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இடம் பிடிக்கவும் வாய்ப்புண்டு.

இந்திய அணி உத்தேச பட்டியல்:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (C), சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.

Reserves: பிரித்வி ஷா, க்ருனால் பாண்டியா, முகமது சிராஜ்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!