IPL 2021 – அமீரகம் சென்ற CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்! ரசிகர்கள் உற்சாகம்!
IPL போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் 2021:
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கொரோனா தொற்று பரவியதால் கடந்த 20220ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ரசிகர்கள் இன்றியும் சிறப்பாக இப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நேரத்தில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!
அதன் காரணத்தினால் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த 2021ம் ஆண்டின் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் செப்.19 தேதி சென்னை மற்றும் மும்பை மோதலுடன் துவங்கவுள்ளது. ஒவ்வொரு அணி வீரர்களும் தற்போது வரிசையாக அமீரகத்திற்கு சென்று கொண்டுள்ளனர். அனைத்து அணி வீரர்களும் அங்கு வலைப்பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஸ்மித், டிவில்லியர்ஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் சென்னை அணி எப்போதும் பலம் பொருந்தியதாகவே விளங்குகிறது. ஏற்கனவே சென்னை வீர்ரகள் தங்களின் பயிற்சியை தொடங்கிய நிலையில் தற்போது பயிற்சியாளர் இணைந்திருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.