தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலஅவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலஅவகாசம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலஅவகாசம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலஅவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படை வீரர்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கால அவகாசம்:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பள்ளிகளிலேயே பதிவு செய்து விடுகின்றனர். அதன் பிறகு 12ம் வகுப்பு முடித்தவுடன் கல்வி தகுதிகளையும் பள்ளி நிர்வாகத்தினர் பதிவு செய்கின்றனர். அதனை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பது அவசியம். தற்போது அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே புதுப்பிக்க ஆன்லைன் மூலம் புதுப்பிக்கவும், கல்வித்தகுதியை அவ்வப்போது பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு கால அவகாசம் அளித்தது. நேரிலோ அல்லது இணையதள முகவரியிலோ புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படை வீரர்களுக்கு கூடுதலாக 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடையா? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு சலுகையாக மீண்டும் மூன்று மாதம் கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் பயன் பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!