தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்தடை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை (டிச.9) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளிட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் மின் தடை ஏற்படுகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் பல்வேறு மின் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. இதனால் அநேக இடங்களில் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்துள்ளது. இதனை அரசு கண்காணித்து மாதந்தோறும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடையா? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

இப்பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஒவ்வொரு பகுதிகளிலும் அறிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள அப்பை நாயக்கன்பட்டி மற்றும் நென்மேனி துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிறுகுளம், வீராா்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன்செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, சிந்துலம்பட்டி, எம்.நாகலாபுரம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

அத்துடன் ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கா்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், ஆசிலாபுரம், தெற்கு வெங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றும் மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here