இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு – 20,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

0
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு - 20,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு - 20,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு – 20,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள சில பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்காக விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி போன்றவையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் துறை:

இந்திய அஞ்சல் துறை (india post) பல வழிகளில் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதேபோல், இந்திய அஞ்சல் துறை சிறிய வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதனால் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அஞ்சலகங்களில் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள் திட்டம், PPF திட்டம், மாத வருமானத் திட்டம், தேசிய சேமிப்பு திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்கள் செயல்பட்டு வருகிறது .

Exams Daily Mobile App Download

தற்போது இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Staff Car Driver பணிகளுக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதிகளாக இலகு ரக மற்றும் கனரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றும், மோட்டார் பொறிமுறை பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் இலகுரக அல்லது கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஓய்வு பெறும் ஆயுதப்படை பணியாளர்கள் அல்லது ஒரு வருட காலத்திற்குள் இடஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட வேண்டியவர்கள் மற்றும் தகுதி உள்ளவர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு மாதம் ரூ.5,200-ரூ.20,000 வரை சம்பளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து O/o the Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai -600 006. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022 என்றும் குறிப்பிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here