வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கை மக்கள் – வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை!

0
வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கை மக்கள் - வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை!
வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கை மக்கள் - வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை!
வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கை மக்கள் – வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை!

இலங்கையில் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். அதற்காக பாஸ்போர்ட்களை பெற முயற்சித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அந்நாட்டு வேலைவாய்ப்பு மையம் வேலை நாடுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இலங்கையில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே வெளிநாடு தப்பி சென்றார். இதையடுத்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டத்தை அடுத்து அவர் பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்கிரம சிங் இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தற்போது நாட்டில் இயல்பு நிலையை உருவாக்க அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது.

இந்த நேரத்தில் அந்நாட்டு மக்கள் செலவுகளை சரி செய்ய முடியாமல் குடும்பம் குடும்பமாக வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வேலை வேண்டி வெளி நாடுகளுக்கு படையெடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு வேலைவாய்ப்பு மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. தற்போது வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கையாடல் செய்யும் முயற்சியில் பலர் இறங்கி உள்ளனர்.

அரசு தேர்வின் போது 4 மணி நேரம் இன்டர்நெட் முடக்கம்? முக்கிய தகவல்!

இவர்களிடம் இருந்தும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசாவை பயன்படுத்தி அங்கீகாரம் அற்ற தொழில் செய்ய செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!