தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

0

தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் இதுவரையில் 57 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் மே 12ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் உதகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் அதிகம் வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. மேலும் இதை தடுக்கும் விதமாகவும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி உதகை நகர திமுக சாா்பில் நகர செயலாளா் ஜாா்ஜ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கணேசன் வழங்கினார்.

SRH vs RCB Dream11: விளையாடும் XI, பிட்ச் அறிக்கை, பேண்டஸி கிரிக்கெட் குறிப்புகள் இதோ!

மேலும் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ், நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், உதகையில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 200 நிறுவனங்கள் வரை கலந்து கொள்ள உள்ளன.

இதன் மூலம் சுமாா் 15,000 பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் படித்து முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரையில் 57 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72,000 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!