தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 2020 – 21 ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

அசல் சான்றிதழ்:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை அடைந்தது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் இறப்பு விகிதமும் அதிகரித்தது. கொரோனா தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.

சென்னையில் LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிப்பு – ரூ.1867.50 ஆக நிர்ணயம்!

மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடுவதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக இருந்ததால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் சூழல் அமையவில்லை. எனவே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. மேலும் முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை – இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!

தற்போது 2020 – 21 கல்வியாண்டில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் திங்கட்கிழமை முதல் தங்களுடைய அசல் சான்றிதழ்களை பள்ளியில் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சான்றிதழ்கள் பெற பள்ளிக்கு வரும்போது முகக்கவசம் அணிதல் மற்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here