சென்னையில் LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிப்பு – ரூ.1867.50 ஆக நிர்ணயம்!

0
சென்னையில் LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிப்பு - ரூ.1867.50 ஆக நிர்ணயம்!
சென்னையில் LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிப்பு - ரூ.1867.50 ஆக நிர்ணயம்!
சென்னையில் LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிப்பு – ரூ.1867.50 ஆக நிர்ணயம்!

சென்னையில் இன்று வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 36.50 உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட தற்போது அதிகரித்துள்ள சிலிண்டர் விலையால் வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LPG விலை உயர்வு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கேஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு 2 முறை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை உயர்விற்கு பொது மக்களும், அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை – இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!

தற்போது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூபாய் 1000 ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. சென்னையில் ரூ.900.50 ஆகவும், சேலத்தில் 918.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த நேரத்தில் அதிகரிக்கும் வர்த்தக சிலிண்டர் விலை வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.

ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றங்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்று சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 36.50 அதிகரித்து, ரூ.1867.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1831க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடரந்தால் ஒரு வர்த்தக சிலிண்டர் விலை ரூபாய் 2000 ஐ தொடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் அதிகளவு சிலிண்டர் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் உணவு பொருட்கள் விலை ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!