LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை – இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!

0
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை - இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை - இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை – இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!

இன்று முதல் அக்டோபர் மாதம் துவங்கியுள்ள நிலையில் LPG கேஸ் சிலிண்டர் முதல் பென்சன் வரை சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய மாற்றங்கள்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக LPG கேஸ் சிலிண்டர் முதல் வங்கித்துறை வரையிலும் தொடர்ச்சியாக சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று துவங்கியுள்ள அக்டோபர் மாதம் முதல் மேலும் சில மாற்றங்கள் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றங்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அந்த வகையில் குறிப்பாக LPG கேஸ் சிலிண்டர்களில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தவிர பென்சன், வங்கித்துறை ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஓய்வூதியம்:

முதலாவதாக அக்டோபர் 1ம் தேதி முதல் ஓய்வூதியம் தொடர்பான டிஜிட்டல் சான்றிதழ் விதிகள் மாற்றப்பட உள்ளன. பொதுவாக ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் சான்றிதழ் அல்லது வாழ்க்கை சான்றிதழை இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில் அல்லது பிரமான் மையத்தில் செலுத்தி வருகின்றனர். இந்த சேவைகளுக்கான காலக்கெடுவை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காசோலை விதிகள்:

அடுத்ததாக பஞ்சாப் பொதுத்துறை வங்கிகளில் காசோலைகள் நிறுத்தப்பட இருக்கிறது. அதாவது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் MICR குறியீடுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லாது. இந்த காசோலைகளை புதுப்பிக்காவிட்டால் வங்கி கடன்கள் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ டெபிட் வசதி:

RBI சமீபத்தில் வெளியிட்ட உத்தரவின்படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து தானியங்கி டெபிட் வசதி சில பாதுகாப்பு அம்சங்களுடன் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளிலும் AFA செயல்முறை பின்பற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் அரசு AC பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

இதனால் மாதாந்திர பில்கள், மாத தவணைகள் செலுத்தும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அல்லது SMS மூலம் தகவல் அனுப்பப்படும். இதற்கு பிறகு தான் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.

முதலீட்டு விதிகள்:

நிதி முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக ‘இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்’ புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இந்த விதி, மியூச்சுவல் பண்ட் ஹவுஸில் (AMC) பணிபுரியும் ஊழியர்களுக்காகும். இதன் கீழ் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 10% முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் இடம் மாறுதல் காரணத்தின் கீழ் 2023க்குள் 20% முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

கேஸ் சிலிண்டர் :

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் சிலிண்டர்களில் விலை உயர்வை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!